August 30, 2013

வாழ்க பதிவர் ஒற்றுமை.வளரட்டும் பதிவர்கள் புகழ்.

வணக்கம் தமிழ் நெஞ்சங்களே.

நீண்ட நெடிய நாட்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறோம்.
சென்னையில் பதிவர் சந்திப்பு மிக விமர்சையாக மீடியா உலகமே திரும்பி
பார்க்குமாறு நடக்க இருக்கிறது. இம்முறை பதிவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மேலும் இதுவரை முகம் காட்டாத பல பதிவர்கள் வருவார்கள் போல தெரிகிறது.ஆரோக்கியமான விஷயம்.

எடக்கு மடக்கு ஆரம்பிக்கபட்டதின் நோக்கமே-பதிவர்கள் ஒரு சிலர் எவ்வளவு முட்டாள்தனமாக தங்கள் கருத்தை மற்றவர்கள் மேல் ஒற்றிவிடுகிறார்கள்  என்பதை உலகத்துக்கு எடுத்து சொல்வதற்கே.மேலும் ஒரு சில தகிடுதத்தங்கள் குழுமமாக நடந்தது. அதையும் இவ்வுலகத்திற்கு எடுத்து சொன்னோம்.இப்போது அவை அனைத்தும் சரி ஆகிவிட்டதா என்றால் ?

ஆம்
.கிட்டத்தட்ட சரி ஆகிவிட்டது என்றே சொல்லலாம்.இப்போது பதிவுலகம் மிக மிக ஆரோக்கியமான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது.
ஒரே ஒருவர் இருக்கிறார்.அவர் வெளிப்படையாக ஓட்டு விவகாரத்தை மறைக்காமல் நான் தான் செய்கிறேன் என்று சொல்லுகிறார்.மன நோயாளி பருண்  மாமா,சப்பலாக்கட்டை இவர்களுக்கு எல்லாம் பதிவு போடுவது குப்பை தொட்டியை கிளறுவதர்க்கு சமம்.

நாங்கள் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை.தற்சமயம் பதிவர்கள் முகபுத்தகத்தில் முழுமூச்சாக இயங்குகிறார்கள்.அங்கும் நிறைய சைக்கோக்கள்  இருக்கிறார்கள். அவர்கள் பதிவர்கள் இல்லை என்பதாலும் அவர்கள் கருத்துக்கள் பதிவில் பகிரப்படுவதில்லை என்பதாலும் நாங்கள் கண்டுகொள்வதில்லை.என்ன சில சமயம் ஜாதி வெறி தலை தூக்குகிறது.

அது இரத்தத்திலேயே ஊறியது.அவர்களை புறக்கணிப்பதே சரி.விவாதித்து
சரி பண்ணுவது என்பது ஆகாதது என்பது எங்கள் எண்ணம் .அவர்களே ஒரு கால கட்டத்தில் புரிந்து கொள்வார்கள்.


             
                                         


இதுவரை எங்கள் பணியை சிறப்பாகவே செய்துள்ளோம் என்ற மன நிறைவு எங்கள் குழுவுக்கு இருக்கிறது.

பதிவர் சந்திப்புக்கு எங்கள் குழுவின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை
சொல்லி கொள்கிறோம்.பதிவர்களை சந்தியுங்கள்.உங்கள் நட்பை பலபடுத்திக்கொள்ளுங்கள் .வளமான நட்ப்போடு வாழுங்கள்.

இனி பதிவர்கள் எந்த வித கில்மிஷத்திலும் ஈடுபடாமல், ஒற்றுமையாக
ஆரோக்கியமான விவாதத்துடனும்,அருமையான பதிவுகளும் இடுவார்கள் என்ற 100% நம்பிக்கையுடன் எடக்கு மடக்கு குழு தற்காலிகமாக உங்களிடம் இருந்து விடை பெறுகிறது.

இதுவரை பின்னுட்டம் இட்டு எங்களை உற்சாகபடுத்திய அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி.நன்றி.நன்றி.

ஆனால் ஒன்று.மீண்டும் பதிவுலகில் பஞ்சாயத்து தேவை படும் எனில்
நாங்கள் தயக்கமே இல்லாமல் மீண்டும் களத்தில் குதிப்போம் என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிறோம்.தேவையான இடங்களில் பின்னுட்டம் மூலம் வருவோம்.

எங்கள் குழு தலைவரின் அனுமதி வேண்டி காத்திருக்கிறோம்.அனுமதி கிடைத்ததும் எங்கள் குழுவில் உள்ள ஒரு சிலர் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்வார்கள்.


               
                                      வாழ்க பதிவர்கள்.
             ஓங்குக பதிவர் ஒற்றுமை.


எங்களை தொடர்பு கொள்ள chennaipathivargal@gmail.comஉள்ள வாங்கப்பா..

March 11, 2013

மாணவர்களின் ஈழப் போராட்டத்தால் சேகுவாரா,காமராஜர் முளைப்பார்களா?

வணக்கம் தமிழ் நெஞ்சங்களே.
ஈழ விவகாரத்தில் நமது லயலோ கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம், உலகின் ஒட்டு மொத்த தமிழர்களையும், தமிழர் அல்லாத மற்றவர்களையும் சற்றே நினைத்து பார்க்க வைத்துள்ளது. அரசும் அவர்களை நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதோடு அல்லாமல், போராட்டத்தை பிசுபிசுக்க வைக்க நினைத்தது. இங்கதான் மாபெரும் தவறான ஆலோசனைகளை மிக அறிவுபூர்வமான ஆட்கள் அரசுக்கு சொல்லி இருக்க வேண்டும்.

எல்லாரும் சொல்லுவதை போல் தேன் கூட்டில் கை வைத்தது போல
ஆகிவிட்டது. இன்று தமிழகமெங்கும் மாணவர்களின் போராட்டம் களை கட்டியுள்ளது. இனிதான் அரசுக்கு தலை சொறிதல் ஆரம்பம். மாணவர்களின் போராட்டத்தை இனி வேறு வகையில் திசை  திருப்பும்  அரசு. நடத்திப் பார்க்கட்டும். அதையும் உலக தமிழர்கள் பார்த்துக் கொண்டு தான் இருப்பார்கள்.


1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் எப்படி தமிழகம், மற்றும் மாணவர்களிடையே மிகப் பெரிய எழுச்சி உண்டானதோ அதே போல ஒரு எழுச்சி இப்போது உருவாக்கி உள்ளது. அப்போதாவது தி.க., மற்றும் தி.மு.க. போன்ற கட்சிகள் போராட்டத்தை முன் எடுத்து சென்றது.

இன்றைக்கு அனைத்து அரசியல்(வியா)(வா)திகள் தம் சுயநலம் கொண்டு
இந்த போராட்டத்தினால் திகைத்து நிற்பது நிஜம். எப்படி எந்த ஒரு
கட்சியையும் சாராமல், யாருடைய ஆதரவும் கோராமல் எதன் 

அடிப்படையில், இவர்கள் போராட்டத்தை முன் எடுத்து செல்கிறார்கள்? எப்படி இது இந்த அளவுக்கு தீ பொறி போல் பரவியது? கடந்த இரண்டு  நாட்களாக தூங்காமல் அனைவரையும் கக்கா போகும்போது கூட யோசிக்க வைத்துள்ளது இந்த வியாதிகளுக்கு.

அன்பு மாணவர்களே !
உங்களின் இந்த போராட்டம் எந்த வித சுய நலமும் இல்லாமல் ஈழ தமிழர்களுக்காக மட்டும் எனில் இந்த தமிழகம் உங்களுக்கு தலை வணங்குகிறது. HATS OFF..

 
இனி முக்கிய விடயத்துக்கு வருவோம்.

அன்பு மாணவர்களே!
இதோ தமிழகம் எங்கும் போராட்டம் ஆரம்பித்துவிட்டீர்கள். அதுவும் அனைத்து தரப்பினரையும் சென்று அடைய ஆரம்பித்து விட்டது. இனிதான்
நீங்கள் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் . இந்த போராட்டம் வெறும் இன உணர்வால் வெடித்து பரவியுள்ளது. இனி இதை எப்படி முன்னேடுத்து செல்ல போகிறீர்கள்? இந்த போராட்டத்தை எந்த அளவில் கொண்டு செல்ல போகிறீர்கள்?உங்களை ஒருங்கிணைப்பவர்கள் யார்?
உங்களுக்குள் தகவல் பரிமாற்றம் எப்படி யார் மூலம் நடக்க போகிறது?
அதற்கு யார் சுயநலம் இல்லாத அனைத்தையும் துறந்த மனிதர் இருக்கிறார்?

தயவு செய்து நமது அரசியல்(வியா)(வா)திகளை நம்பாதீர்கள். ப்ளீஸ்.

இப்போதைக்கு தமிழகம் மட்டும் இல்லை, இந்தியாவிற்கே வரும் காலத்தில் ஒரு நல்ல லீடர்ஷிப் இல்லை. அதாவது இருப்பவர்கள் அனைவரும் பக்கா அரசியல்(வியா)(வா)திகள். எப்படி முன்பு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்களிடம் இருந்து இப்போது இருக்கும் நல்ல பேச்சாளர்கள், அரசியல்(வியா)(வா)திகள்?! கிடைத்தார்களோ?! அது போல வரும் காலத்தில் யார் இந்த தமிழகம்,இந்தியாவை முன் எடுத்து செல்வது? (சுயநலம் இல்லாமல்)

இப்போது இருக்கும் அரசியல்(வியா)(வா)திகள் இன்னும் ஒரு தலை முறை வரை இந்தியாவை சுரண்டுவார்கள். அதன் பிறகு அவர்கள் போக்குக்கே விட்டால் அவர்கள் வாரிசுகள் தான் --மிச்சம் மீதி இருக்கும் இந்தியாவை கூறு போட போவார்கள்.

எங்கள் எடக்கு மடக்கு குழு இந்த போராட்டத்தில் ஒன்றை எதிர் பார்க்கிறது.


அது லீ குவான் யூ, சேகுவாரா போல் ஒரு அருமையான வழி நடத்தும் தலைவர் கிளம்பி வர மாட்டாரா? தன்னை அடையாள படுத்தி கொள்ள மாட்டாரா என்று.  தமிழகம், இந்தியாவை  சத்தியத்தின் மேல் வழி நடத்த மாட்டாரா என்று. இது ஒட்டு மொத்த தமிழகம் இந்தியாவின் ஏக்கம்.
காமராஜர்,கக்கன், இன்ன பிற தன்னலம் கருதாத தலைவன் கிடைப்பாரா என்று?

அன்பு மாணவர்களே! உங்களில் யார் தன்னலம் இல்லாமல், இந்தியா என்ற ஒரே குறிக்கோளுடன் கிளம்பி வருகிறீர்களோ உங்களை வரவேற்க தமிழகம், இந்தியா காத்திருக்கிறது.


அன்பு மாணவர்களின் பெற்றோர்களே. படிக்கிற வயதில் இது எல்லாம் தேவையா என்று தயவு செய்து முட்டு கட்டை போடாதீர்கள். ஒரு நல்ல குடி மகனை இந்தியாவிற்கு தத்து கொடுத்துள்ளோம் என்று பெருமைபடுங்கள்.


மாணவர்களே உங்களை நம்பித்தான் குடும்பம் இருக்கிறது. அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை எனில் உங்கள் கடைமையை முழுமையாக முடித்து விட்டு வாருங்கள். உங்களுக்காக மக்கள்  காத்திருப்பார்கள்.

அடுத்து??
இங்க நிறைய என்ன? இணையம் வைத்திருப்பவர்கள் அனைவரும் இணைய போராளிகள் தான். So.. பல கோடி ஆலோசனைகள், தீர்வுகள் (இதோ இப்ப நாங்கள் சொல்லுவது போல்!!!)  வரும். அவற்றை எல்லாம் பகுத்து ஆராய்ந்து உங்கள் மனதில் தமிழகம்,இந்தியா மட்டும் நின்றால் வாருங்கள்.

இந்த உலகை வெல்வோம்.!!!

நல்ல வேளை இன்னும் கேடுகெட்ட சினிமாநடிகர்கர்கள் குரல் கொடுக்க வில்லை.

உள்ள வாங்கப்பா..

February 6, 2013

திரு.டோண்டு ராகவன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

வணக்கம் தமிழ் நெஞ்சங்களே.

நம் வலைப்பதிவின் முத்த பதிவரும்,சைபர் கிரைம்ஐ இந்தியா,தமிழ் நாட்டுக்கு முதன்முதலில் தெரியவைத்தவருமான திரு.ராகவன் என்கிற
டோண்டு ராகவன் இன்று நம்மிடம் இல்லை.மாரடைப்பால் அகால மரணமடைந்தார்.

அவருக்கு எங்கள் எடக்கு மடக்கு குழுவின் சார்பாக கண்ணீர் அஞ்சலிகள்.

அவர் இந்த வலையுலகிற்கு செய்த அளப்பரியா செயல்கள்—நம்மை போன்ற பதிவர்களுக்கு மிக பெரிய முன் உதாரணம்.மலேசிய மூர்த்தி என்பவரால் (போலி) டோண்டு என்று இன்னொரு பெயர் வைத்து அவர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சொல்லொன்னா துயரத்துக்கு ஆளானபோதும் திடம் கொண்டு போராடி உண்மைகளை வெளி உலகத்துக்கு கொண்டுவந்தவர்.

அவர் சார்ந்த முன்னேறிய சமுகத்திற்கு ஏற்பட்ட சிறு கலங்கல்களை தமது பின்னுட்டம்,பதிவுகள் மூலம் தக்க பதிலடி கொடுத்தவர்.குறிப்பாக மார்க்க பந்துக்களுக்கு இந்து மதத்தை வைத்து கடும் வாதம் புரிந்தவர்.

திரு.டோண்டு அவர்களின் இழப்பு பதிவுலகத்திற்க்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய நம் பதிவர்கள் அனைவரும் விருப்பு வெறுப்பு இன்றி விரும்புவோம்.  

உள்ள வாங்கப்பா..

January 30, 2013

விஸ்வரூபம் படத்தின் வருமானம் முழுவதும் கமலுக்கு போய் சேர உதவுங்கள்.

வணக்கம் தமிழ் நெஞ்சங்களே !

விஸ்வரூபம் படத்திற்கு  சென்னை உயர் நீதிமன்றம தடை விளக்கி உள்ளது.
மார்க்க பந்துக்களுக்கு இனி மூக்கை தேடவேண்டும்.

என்ன மிஞ்சி மிஞ்சி போனால் படம் ஓடும் தியேட்டர் முன் கலாட்டா செய்வார்கள்.

போகட்டும். அவர்களை அரசாங்கம் கவனித்து கொள்ளும்.

இனி அனைத்து சமுதாயத்து மக்களை சார்ந்த நாம் என்ன செய்ய  வேண்டும் என்றால் விஸ்வரூபம் பார்க்கும் எல்லாருமே நாம் செலவழிக்கும் தொகை முடிந்த அளவுக்கு கமலை சென்று அடைய வேண்டும்.

அதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் முடிந்த அளவுக்கு எந்த விதத்திலும்
நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்ளாமல் கமலுக்கு எந்த விதத்தில் லாபம் தருமோ அந்த வழியை கையாளுவோம்.

அது டிடிஹ்ச் ஆனாலும் சரி,
தியேட்டர் ஆனாலும் சரி,
அவரின் சொந்த டிவீடி-
யானாலும் சரி 

நம் தமிழனின் உலகமகா காவியத்திற்கு சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக
தடை போட நினைத்தவர்களை -அந்த எண்ணம் இனி வராமல்
நம் செய்கை மூலம் துடைத்து எறிவோம்.உறுதி கொள்ளுங்கள் உண்மை தமிழர்களே.!

கடைசியாக:-
எங்களையும் இப்படி ஒரு நிலை எடுக்க வைத்த அனைவருக்கும் நன்றி!
இனி  ?

டிஸ்கி :- இன்ன பிற  படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன பின்.நன்றி!
இது அவசர பதிவு.படங்கள் பிறகு.

உள்ள வாங்கப்பா..